செய்திகள்

நெருப்புடா அருண்ராஜாவின் மற்றுமொரு அவதாரம்

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என தற்போது கலக்கிவருபவர் அருண்ராஜா காமராஜ். கபாலியில் ‘நெருப்புடா’, பைரவாவில் ‘வரலாம் வரலாம் வா..’ ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனதால் தற்போது மகிச்சியில் இருக்கிறார் அவர்.

இந்நிலையில் அவர் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அவருக்கு இது நீண்ட நாள் ஆசையாம்.

அவரின் முதல் படத்திற்காக காத்துக்கொண்டிருப்பதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.