நெல்லியடியில் ஆட்டோ- மோட்டர் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இருவர் படுகாயம்
நெல்லியடி, நாவலர் மடத்தடியில் நேருக்கு நேர் வந்த ஆட்டோ – மோட்டர் சைக்கிள் என்பன வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நெல்லியடி நாவலர்மடம் பகுதியில் இன்று பி ப 12-30 மணியளவில் கோர விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆட்டோ – மோட்டார்சைக்கிள் நேருக்கு நோ் மோதி இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இரு சாரதிகளும் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் ஆட்டோவுக்குள் மோட்டர் சைக்குள் புகுந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடிப் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
N5








