நோபல் பரிசு: வேதியல் பிரிவில் மூவருக்கு அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கரோலின் ஆர். பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் கே. பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு இவ்வாறு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி’ வளர்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
2022ம் ஆண்டின் நோபல் பரிசுகள் அனைத்தும் அக்டோபர் 3ம் தேதி முதல் 10ம் திகதி வரை அறிவிக்கப்பட்டு வருகின்றது. அக்டோபர் 3ம் தேதி அன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசை ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்விற்க்காக வென்றுள்ளார்.
இதேபோல், அக்டோபர் 4ம் தேதியான நேற்று இயற்பியல் துறைக்காக பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகிய மூவர் வென்றுள்ளனர்.
இந்நிலையில், அக்டோபர் 5ம் திகதியான இன்று வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




