செய்திகள்

பசிலின் மனைவி, மகள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவில்லை: வெளிநாட்டில் என தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர்கள் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், வெளிநாடு சென்றுள்ளமை காரணமாகவே இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் வான் படைக்குச் சொந்தமான வானூர்திகளை பயன்படுத்தி உள்ளுர் பயணங்களை மேற்கொண்டமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்பொருட்டு கடந்த 5ஆம் திகதியும் குறித்த இருவரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அன்றைய தினமும் அவர்கள் பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோசித ராஜபக்ஸ, இன்று நான்காவது தடவையாக நிதிமோசடி காவல்துறை பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பொருட்டே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
R-06