‘பஞ்ச்’ வசனத்தில் அஜீத் ஆர்வம்
ரஜினி, விஜய் படங்களில் ‘பஞ்ச்’ வசனங்கள் பிரபலம். ஒரு கட்டத்தில் மற்ற ஹீரோக்கள் மட்டுமல்லாமல் புதுமுக ஹீரோக்களும் ‘பஞ்ச்’ வசனங்களை பேசத் தொடங்கினர். இதையடுத்து ரஜினி தனது படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசுவதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.
விஜய்யும் ‘பஞ்ச்’ வசனங்களை தவிர்த்து வருகிறார். இந்த பாணியை தற்போது இயக்குனர்கள் அஜீத் மீது திணித்து வருகின்றனர். ‘எனக்கு நண்பனா இருக்க தகுதி தேவையில்லை எனக்கு எதிரியா இருக்க தகுதி வேணும்’, ‘என் வாழ்க்கைய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கனது’ போன்ற பஞ்ச் வசனங்களை தனது படங்களில் அவர் பேசி வருகிறார்.
‘விவேகம்’ படத்தில் சற்று கூடுதலாகவே இந்த மசாலா விஷயங்களை சேர்த்திருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்துக்காக முதன்முறையாக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியிருக்கும் அஜீத்துக்கு, ‘பஞ்ச்’ வசனமும் இணைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு வசனம் சமீபத் தில் லீக் ஆனது. ‘என்னை தோற்கடிக்கணும்னு எல்லோரும் நினைக்கிறாங்க. ஆனால் நான் தோற்கணுங்கறதுகூட நான்தான் முடிவு செய்வேன். இன்னொருத்தர் முடிவு செய்ய விடமாட்டேன்’ என்று பேசியிருக்கிறார்.(15)




