செய்திகள்

படையினர் மீது காரை மோத முயன்ற இருவர் கைது – பிரான்சில் சம்பவம்

பிரான்சில் படையினரை இலக்குவைத்து வாகனத்தை செலுத்திய இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பிரான்சின் அல்ப்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அல்ப்ஸ் பகுதியில் உள்ள முகாமொன்றிற்கு வெளியே உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த படையினர் மீது காரை செலுத்தி தாக்குதலை மேற்கொள்ள முயன்றவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காரைச்செலுத்தியவரை தேடி கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் காரில் அவ்வேளையில் காணப்பட்ட பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட பெண்ணே வாகனத்தின் உரிமையாளராகயிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உதைபந்தாட்டப்போட்டியில் கலந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த படையினர் மீதே சந்தேகநபர்கள் காரை செலுத்த முயன்றுள்ளனர்.

கார் தங்களை நோக்கி வருவதை அவதானித்த படையினர் வேகமாக செயற்பட்டு தப்பித்துக்கொண்டனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அந்த பகுதியை சுற்றிவளைத்த படையினர் வாகனச்சாரதியையும் வாகனத்திற்குள் இருந்த நபரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.