பட்டங்களால் விமானங்களுக்கு இடையூறு : உயரத்திற்கு பட்டம் விட வேண்டாம் விமானப்படை கோரிக்கை
விமானங்கள் அதிகமாக பறக்கும் வலலயங்களில் உயரத்திற்கு பட்டங்களை விடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு விமானப்படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இரத்மலான , நீர்கொழும்பு , கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமான உயரங்களுக்கு பட்டம் விடுவதால் அந்தப் பகுதியில் விமான போக்குவரத்துக்களுக்கு இடையூராக அமையலாம் எனவும் இதனால் விமான விபத்துக்களும் ஏற்படலாமெனவும் இதனால் அளவுக்கு அதிகமான உயரத்திற்கு பட்டம் விடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு விமானப்படையினர் பட்டம் விடுவோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது காற்று காலம் என்பதனால் பட்டம் விடும் காலப்பகுதியாக இது காணப்படுகின்றது. இருப்பினும் மக்கள் விமான பயணங்களுக்கு இடையூ இன்றி அதனை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் போன்ற நாடுகளில் 200 மீற்றர் உயரத்திற்கும் மேல் பட்டம் விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




