செய்திகள்

பணயக்கைதிகள் விடுவிப்பு எதிர்வரும் நாட்களில்

காசாவில் பணயக்கைதிகள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ள நிலையில், “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

இது எளிதான வழியாக இருந்தாலும் அல்லது கடினமான வழியாக இருந்தாலும் அது அடையப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அமைதித் திட்டத்தின் கீழ் பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹாமாஸ் ஒப்புக்கொண்டது.

எனினும் நிராயுதபாணியாக்கத்தைக் அவர்கள் குறிப்பிடவில்லை என்பதுடன் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றது.

எவ்வாறாயினும் ஹமாஸின் தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

“ஹமாஸ் விரைவாக நகர வேண்டும், இல்லையெனில் அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என அவர் தமது சமூக வலைத்தளத்தில் எச்சரித்துள்ளார்.

காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் 20 அம்ச கோரிக்கைகள் அண்மையில் முன்வைக்கப்பட்டது.

அதனை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.