பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை
பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்போரை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.பிரதேச ரீதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை முட்டைக்கான நிர்ணய விலையை நேற்றைய தினத்திற்குள் அறிவிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் முட்டை விலை தொடர்பான வழக்கு இன்றும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள காரணத்தினால் அது குறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.(15)




