செய்திகள்

பதவி நீக்கம் செய்ய முன்னர் பந்துலவே விலகிவிட்டார் : மகிந்த அமரவீர

பந்துல குணவர்தன தனது தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து அவராகவே விலகியது அவருக்கு நல்லதாகிவிட்டதாகவும் அவர் விலகியிருக்காவிட்டால் நாமே விலக்கியிருப்போம் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபசெயலாளரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவரை நாம் அந்தப் பதவியிலிருந்து விலக்குவதற்கே தீர்மானித்திருந்தோம். அதற்கு முன்னரே அவர் விலகிவிட்டார். இதேவேளை இனவாத செயற்பாடுகளில் ஈடுபடும் கட்சி அமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவரை பதவி விலக்குவோம். என அவர் தெரிவித்துள்ளார்.   -(3)