செய்திகள்
பதுளையில் மண்சரிவு அபாயம் : பல குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
தற்போது நாட்டில் தொடர ஆரம்பித்துள்ள மழையுடன் கூடிய கால நிலை காரணமாக மலையகத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்கள் நிலவுகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு ஹபுத்தளை பிளக்வூட் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளையில் பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் நிலவுவதாகவும் இதனால் வாகன சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். -(3)




