பனாமா தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்தது
சட்ட விரோத முதலீடுகள் தொடர்பான பனாமா பத்திரத்தில் காணப்படும் இலங்கையர்களின் பெயர் விபரங்களை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே இதனை தெரிவித்துள்ளார்.
2013இல் சிங்கப்புரிலுள்ள நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தது. இதிலிருந்த விடயங்களும் பனாமா பத்திரத்தில் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் இன்னும் பல பெயர்கள் வருமென நாம் நம்புகின்றோம். சிலர் இதில் சட்டப்பூர்வமான வகையில் முதலீடு செய்தவர்களும் இருக்கலாம். வெளிநாட்டில் பலர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம். சுவிஸ் கணக்கு உள்ளிட்ட கணக்குகள் உள்ளன.
இதில் சட்டபூர்வமானவை உள்ளன. வீரர்கள் போல் கதைக்கும் பலரின் கணக்குகள் இத்தாலி லண்டன் போன்ற நாடுகளில் உள்ளன. அதனை சட்டத்திற்கு முரனானது என கூற முடியாது. பனாமா பத்திரத்தில் தகவல்கள் வெளியானதிற்காக அவை அனைத்தும் மோசடியானது எனவும் கூற முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தாது நமக்கு அவை சட்ட விரோதமானது என கூறமுடியாது. இதனால் அரசாங்கம் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06




