பம்பலப்பிட்டி வர்த்தகர் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சாகீம் சுலைமான் தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரின் தலையில் வலது காதுக்கு கீழே தட்டையான ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் இதனால் அவரின் மண்டையோட்டில் வெடிப்பு ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவரின் சடலம் மீட்கப்பட்ட போது அது பழுதடைந்த நிலையில் காணப்பட்டத்தை அடிப்படையாக கொண்டுஅவர் கடத்தபட்ட தினத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரின் தந்தையிடம் கப்பம் கோரியவர்கள் அவர் கொலை செய்யப்பட்ட பின்னரே அதனை கோரியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட இவர் நேற்று மாலை மாவனெல்லையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




