செய்திகள்

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புடையவர்கள் வர்த்தகர்களா? : தீவிர விசாரணை முன்னெடுப்பு

பம்பலப்பிட்டியில் இளம் வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பொலிஸ் குழுக்கள் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன்படி அவருடன் கொடுக்கல் வாங்கள் தொடர்புகளை பேணிய வர்த்தகர்களில் சிலர் மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர்கள் தொடர்பாக தீவிராகமாக கண்கானித்து வருவராக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காது ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 5 பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவிலும் மற்றும் கொழும்பு ஊழல் மோசடி விசாரணை பிரிவிலும் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இதன்படி குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன் இந்த முறைப்பாடுகள் தொடர்பான வழக்கு விசாரணையொன்று எதிர்வரும் தினங்களில் நடைபெறவிருந்த நிலையிலேயே இவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடிப்படையாக கொண்டே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இது வரை ஆதாரபூர்வமான காரணங்கள் எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)