செய்திகள்

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை விவகாரம் : 8 பேர் கைது

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுலைமானுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட ஒருவரும் அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் சடலத்தை வாகனத்தில் கொண்டு சென்றதாக கூறப்படும் 7 பேரையும் இவ்வாறு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுலைமானின் நெருங்கிய உறவினர் ஒருவரே இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் கப்பம் பெறும் நோக்கத்திலேயே அவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் கடத்தல் காரர்களுடன் முரண்பட்டதால் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். -(3)