செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக வரவுள்ளது முன்னைய சட்டத்தை விட மோசம்: சுமந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலமானது முன்னையதைவிட மோசமானதாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் மற்றும் சட்ட ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது சுமந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக சட்ட வரைபொன்றைத் தயாரிக்குமாறு சட்ட ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் பரிந்துரைத்திருநதது. அதற’கமைய ஆணைக்குழுவின் முன்பாக நான் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அவ்வரைபு தயாரிக்கப்பட்ட போது நான் அதனைக்காணவில்லை. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபு தற்போது குப்பைத் தொட்டிலுக்குள் சென்றிருக்கும்.

இவ்வாறான நிலையில் பாதுகாப்புடன் சட்பந்தப்பட்ட நபர்களைக் கொண்ட குழு ஒன்று தற்போது மற்றுமொரு வரைபைத் தயாரித்துள்ளது. தயாரிக்கப்பட்ட இந்த வரைபானது நீக்கப்படவுள்ள சட்டத்தைவிட மோசமானதாக இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.”
-06