பயங்கரவாத எதிர்ப்பு – இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தல்!
வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
இதுதொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சட்டங்களும் மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை கடுமையாக பாதிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட துறைசார்ந்த தரப்பினருடன் எவ்வித ஆலோசனையும் இன்றி இந்த சட்டமூலங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனடிப்படையில், சமூகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்வது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
-(3)




