பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை இவ்வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முதல் வாசிப்பிற்காக எதிர்வரும் புதன்கிழமை சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
உரிய குழுவினால் முன்வைக்கப்படும் விடயங்களை ஆராய்ந்தே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
-(3)




