செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை : அரசாங்கம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாகவே அதில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவே அரசாங்கம் இதுவரை இறுதி தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லையென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.