பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான யோசனை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமுகத்தினர் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த வந்த நிலையில் அதனை நீக்க நடவடிக்கையெடுத்துள்ள அரசாங்கம் அதற்கு பதிலாக அதனையொத்த வேறு சட்டமொன்றை கொண்டு வரும் நோக்கிலேயே இந்த சட்ட மூலம் தயாரிக்கப்படவுள்ளது. -(3)




