செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம்: நியூசிலாந்தில் பிரதமர் ரணில் தகவல்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் வாரமளவில் முதலாவது உத்தேச சட்ட வரைபினை சமர்ப்பிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாக்குறுதி அளிக்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
-06