செய்திகள்
பயணிக்கும் பாதை அரசியலுக்கு பொறுத்தமானதா? : கோதாபய
தான் பயணிக்கும் பாதை அரசியலுக்கு பொறுத்தமானதா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் தலதா மாளிகைக்கு சென்றிருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரத்தினப்புரியில் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியின் புதிய முன்னணியை அறிமுகப்படுத்தும் கூட்டத்திற்கு தான் செல்லப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




