பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 13 இளைஞர்கள் கைது
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை , பாவனைகள் மற்றும் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் , பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 13 இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.இதேவேளை கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவர்களை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர்.(15)




