செய்திகள்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி முன்னாள் உப அதிபர் விபத்தில் பலி

பருத்தித்துறையில் நேற்று சனிக்கிழமை காலை  இடம் பெற்ற வாகன விபத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள்  உப அதிபர் கனகசபாபதி அருளானந்தம் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற உப அதிபர் மீது யாழ். நோக்கி சென்ற பஸ் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. வீதியால் வந்த அதிபர், மோட்டார் சைக்கிளை திடீரென திருப்புவதற்கு முயற்சி செய்த போதே விபத்து  இடம்பெற்றதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதி அந்த இடத்திலேயே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.