பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்!
இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 40க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.
ஏட்டிக்கு போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை சதாம் வீதியில் நடக்கவுள்ளது.
ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் கன்னங்கர மாவத்தை பகுதியில் நடக்கவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியின் மேதினக் கூட்டத்தை கம்பஹாவில் நடக்கவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கொட்டகலையிலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலாவாக்கலை நகரிலும், தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளன.
-(3)




