பலத்த மழைக்கான எச்சரிக்கை!
கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (08) இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், வடமத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடுமெனவும் எதிவுகூரப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
-(3)




