செய்திகள்

பலுச்சிஸ்தான் மருத்துவமனை தற்கொலைத் தாக்குதல்: 18 வழக்கறிஞர்கள் உட்பட 69 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்த மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெறுவதற்குமுன், பலுச்சிஸ்தான் மாகாண வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பலுச்சிஸ்தான் தலைநகரில் இருந்த மருத்துவமனையில் அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
20
கொல்லப்பட்டவர்களில் 18 பேர் வழக்கறிஞர்கள். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் செவ்வாய் அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பலுச்சிஸ்தானில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் படுதோல்வியை தழுவி இருப்பதாக பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் சாடியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களில் பல நூறு உயிரிழப்புகளை குவெட்டா கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
R-06