பல்கலைக்கழகத்திற்கு தகுதியுள்ள பலர் அதற்கு அனுமதிக்கப்படவில்லை : மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அரசாங்கம் புதிய முறைமையொன்றை கையாண்டுள்ளதாகவும் இதன்மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடைய மாணவர்கள் பலருக்கு அந்த வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
புதிய முறைமை தொடர்பாக விண்ணப்பிப்பதற்கு முன்னர் மாணவர்கள் தெளிவு படுத்தப்பட்டிருக்கவில்லையெனவும் இதனால் இந்த முறைமை முற்றுமுழுதாக தவறானது என அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்த சங்கத்தினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




