பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும்
2021 க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வரலாற்றிலேயே முதற்தடவையாக விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டு மிகவும் குறுகிய காலத்துக்குள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிக்கும் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)




