செய்திகள்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல்!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-(3)




