செய்திகள்

பல்கலைக்கழ அனுமதி முறைமையில் சிக்கல் : தீர்வு காணுமாறு போராட்டம் நடத்த மாணவர் ஒன்றியம் திட்டம்

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதற்கு தீர்வு காணுமாறு கோரி ஜனாதிபதி இல்லம் மற்றும் அலரி மாளிகை நோக்கி பேரணிகளை நடத்தவுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள முறைமையால் தகுதியுள்ள பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படாதிருப்பதாகவும் இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. -(3)