செய்திகள்

பல்கலை. மாணவர் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மருதானை தொழில்நுட்ப சந்தியில் இருந்து நகர மண்டபம் நோக்கி பேரணியாக சென்ற போதே இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், அதன்போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-(3)