பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கிளிநொச்சி நீதிமன்றத்தால் பலருக்கு அபராதம் விதிப்பு
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் 750 மில்லிலீற்றர் கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் புதன்கிழமை கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரீ.ஜே. பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் 4750 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் 4750 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கடந்த புதனன்று கைது செய்த கிளிநொச்சிப் பொலிசார் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த குற்றவாளிக்கு சுமார் இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றியும் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக பதினேழாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் காப்புறுதிப்பத்திரம், வரிப்பத்திரம், சாரதியனுமதிப்பத்திரம் என்பன இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த பொலிசார் புதனன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த குற்றவாளிக்கு பன்னீராயிரம்; ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேலதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற ஒருவருக்கு 3500 ரூபா தண்டப்பணமும் வரிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமும் என கிளிநொச்சி முழங்காவில் ஆகிய பகுதிகளில் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும் உரிய ஆவணங்கள் இன்றியும் வாகனம் செலுத்திய மூவருக்கும் பதினேழாயிரம் ரூபா தண்டப்;பணம் விதிக்கப்பட்டுள்ளது.




