பல இரகசியங்களை மூடி மறைத்து வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி
வற் வரி தொடர்பாக பல இரகசியங்களை மக்களுக்கு மறைத்தே அதனை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் கூறுகின்ற போதும் அதில் உண்மையில்லையெவும் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் இதனை அரசாங்கம் மூடி மறைத்து பொய்களை கூறி அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அதற்கு ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது எனவும் அந்தக் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




