செய்திகள்
பள்ளிமுணை மீனவர்களை தாக்கிய கடற்படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்
மன்னார் பள்ளிமுணை மீனவர்கள் இரணதீவு கடற்பரப்பில் கொடுரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் மிலோச்சத்தனமான தாக்குதலை நடத்திய கடற்படையினரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்டவேண்டும்.
இவ்வாறன அச்சுறுத்தும் செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கையிணையினை எடுக்ககோரி இன்று மன்னாரில் மீனவ அமைப்புகளுடன் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச கட்டிடத்தில் நடைபெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் தேசிய மீனவ ஒத்தழைப்பு பேரவை இணைப்பாளர் அந்தோனி இயேசுதாஸ் , அதன் மன்னார் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குரூஸ், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சமாசத்தின் தலைவர் எம்.என்.ஆலம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை,வங்காலை பங்கு தந்தை ஜெயபாலன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு, நிறுவனத்தின் இணைப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ , மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்தகொண்டனர்
இதன்போது மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கும் , வடமாகாண மீன்பிடிபோக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரனுக்கும்; குறித்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் தொவிக்கப்பட்டதாவது
கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக
14.02.2016 அன்றுகடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்தமன்னார் பள்ளிமுனைகிராமத்தைச் சேர்ந்தமீனவர்கள் நால்வர் மீதுகடற்படையினர் கூறியஆயுதம் ஊடாகதாக்குதல் நடாத்தியுள்ளனர். குறிப்பிட்டுள்ளதாக்குதலில் ஒருவர் மிகவும் பாதிக்;கப்பட்டுள்ளநிலையில் யாழ்மாவட்டவைத்தியசாலையிலும்,மற்றும் ஒருவர் மன்னார் மாவட்டவைத்தியசாலையிலும் அவசரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்டுள்ளமீனவர்கள் தொடர்பில் கடற்படைவீரர்கள் நடந்துகொண்டுள்ள முறைபாரதூரமானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் சட்டத்திற்கு முரனானதொழில் அல்லது தவறானசெயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் அம் மீனவர்களைநீதிமன்றம் ஊடாக முன்நிறுத்தி அவருக்கானதண்டனையை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். சட்டத்தைகாப்பதற்காகபொறுப்பானவர்கள் சட்டத்தைகையில் எடுத்துசெயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
இதில் இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளானஒருவரின் நிலை இன்னும் கலைக்கிடமாகவே உள்ளது. இவ்வாறான ஒருசில கடற்படையினரின் செயற்பாடுகளால் முழுக்கடற்படையையும் நாம் குற்றம் சாட்டவோ,அல்லதுகுறை கூறவோமுடியாது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறு மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுவதுடன் அதற்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டவேண்டும்
சட்டத்திற்குமுரனான செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுதண்டனை பெற்றுக் கொடுக்கவும் இச் சம்வபத்தில் தொடர்புபட்டகடற்படையினருக்கு எதிராக உரியநடவடிக்கைஎ டுக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டமீனவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும். என மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாககேட்டுக் கொள்கின்றோம் என குறித்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
n10




