செய்திகள்

பஸிலின் புதிய கட்சி  2ஆம் திகதி அறிமுகம்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை நகரில் நடைபெறும் கூட்டமொன்றில் இது தொடர்பான அறிவிப்பை பஸில் விடுக்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது கட்சியின் பெயர் , சின்னம் ஆகியனவும் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் பல எம்.பிக்கள் பஸில் தலைமையில் புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10