செய்திகள்

பஸிலுக்கு புதிய கட்சியை அமைக்க முடியாது  : வீரவன்ச தெரிவிக்கின்றார்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படாது என தேசிய சுதந்திர முன்னணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அது தொடர்பாக இன்று கொழும்பில் விமல் வீரவன்ச தலைமையில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸில் தலைமையில் புதிய கட்சி எதுவும் உருவாக்கப்படாது. அப்படி அவரால் உருவாக்கவும் முடியாது. புதிய கட்சி உருவாகுமாகவிருந்தால் அது மஹிந்த தலைமையிலேயே உருவாகும். என அவர் தெரிவித்துள்ளார்.
n10