செய்திகள்
பஸில் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை என்கிறார் அமைச்சர் எஸ்.பி
பிரதேச சபைகளுக்கென இரும்புக் குழாய்களை கொள்வனவு செய்த போது முன்னாள் பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதரங்கள் எதுவும் கிடையாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொனன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உரிய கேள்வி மனுக்கோரல் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு இரும்புக் குழாய்கள் அந்தந்த பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தேர்தல் காலத்தில் அதனை செய்ததில் தவறு இருக்கலாம் ஆனால் மோசடி இடம்பெற்றுள்ளது என கூற முடியாது.
வேண்டுமென்றால் அதனை தேர்தல் சட்ட மீறல் குற்றச்சாட்டில் விசாரிக்கலாம். ஆனால் மோசடியின் கீழ் விசாரிப்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
திவிநெகும திணைக்கள நிதியில் பிரதேச சபைகளுக்கு இரும்புக்குழாய்களை வழங்கும் போது 3 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக மூன்று வாரங்களுக்கு முன்னர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் பஸில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
n10




