செய்திகள்

பஸில் , பாலசூரிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோர் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளனர்.
விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த அவர்கள் சற்று முன்னர் அங்கு சென்றுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள உடரட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தவே பஸில் ராஜபக்‌ஷ அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் போது தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 4 பேருக்கு ஆயுதங்கள் தரித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பால சூரிய அழைக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)