செய்திகள்

பஸ் கட்டணம் 5.07 வீதத்தால் குறைப்பு

இன்று(02) முதல் பஸ் கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று (01) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய கட்டணத்திற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாகும்.

2002ஆம் ஆண்டின் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக தனியார் பஸ் சங்கங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் கீழ் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-(3)