செய்திகள்

பாகுபலி-2 இந்திய திரைத்துறைக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பாகுபலி-2 ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகுபலி2 படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பாகுபலி-2 இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. பாகுபலி-2 படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.(15)maxresdefault (1) maxresdefault