செய்திகள்

பாகுபாடு காட்டவேண்டாம் :பேசாலை உதயபுரம் கிராம மக்கள் வேண்டுகோள்

பேசாலை உதயபுரம் மக்கள் மீது அரச அதிகாரிகள் உட்பட பலரும் பாகுபாடு காட்டுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

நாட்டில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற இன பிரச்சிணைகாரணமாக இடம்பெயர்ந்து உதயபுரம் கிராமத்தில் குடியேறியுள்ள மக்கள் பல்வேறு பிரச்சிணைகளுக்கு முகம்கொடுத்து வந்திருந்தாலும் தமது கிராமத்தில் அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்களில் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாகுபாடுகாட்டுவதாக கவலையடைந்துள்ளனர்.

குறித்த கிராமத்தின் உட்கட்டுமாணம் தொடர்பாகவும் வீதிகள் உட்பட பல்வேறு அபிவிருத்திதேவைகள் இருக்கின்றபோது அது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தாலும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நேற்று பேசாலையில் உதயபுரத்தை சேர்ந்த சிறுமிஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக பேசாலையை சேர்ந்த தமது பகுதி கிராமசேவகர் மற்றும் சிறுவர் நன்னடத்தைபிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தும் தமது பிரச்சிணைகள் தொடர்பாக நேரில் வந்து கலந்துரையாட விரும்பாததை காணக்ககூடியதாக இருப்பதாகவும்

இந்நிலையை அடுத்தே கிராம மக்கள் போராட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சிறுமி பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞன்  பேசாலை கிராமத்தை சேர்ந்தவர் என்பதினாலேயே குறித்த அதிகாரிகள் இருவரும் சம்பவம் தொடர்பாக கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே எதிர்வரும் காலங்களில் தமது கிராம மக்கள் மீது பாகுபாடு பார்க்காமல் செயற்படும்படி வேண்டுகோள் விடுக்கின்றனர்..