செய்திகள்

பாக்கு உற்பத்தி பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம்

பாக்கு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புகையிலை உற்பத்தி பொருட்களால் ஏற்படும் நோய்களை போன்று பாக்கு மூலமும் நோய்கள் உருவாகின்றன. இதனை கருத்திற்கொண்டு பாக்குடன் தொடர்புடைய சகல உற்பத்தி பொருட்களுக்கும் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் தற்போது பாக்கு பொருட்களை கொண்டு வந்த கொள்கலனொன்று துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.    -(3)