பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்
கடந்த சில நாட்களாக சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வரும் பதிவுகளால் திரையுலகமே பரபரப்பில் இருக்கிறது. சசீத்ராவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை சில விஷமிகள் ஹாக் செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
அண்மையில் இரண்டு நாயகிகளின் ஆபாச புகைப்படங்கள் அவருடைய பக்கத்தில் வெளியாகி இருந்தது. பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் பாடகி சின்மயி இருந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாடகி சுசித்ரா சில தினங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையில் அவர் இல்லாததை அவருடைய கணவர் கார்த்திக் குமார் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் இருந்து தெரியவருவதாகவும் சின்மயி கூறியுள்ளார்.4N5




