பாடசாலை அதிபர்களுக்கு இந்த ஆட்சியிலும் இராணுவ பயிற்சி?
தற்போதைய அரசாங்கத்தினாலும் பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் , ஆசிரியர்கள் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இதேபோன்று இராணுவ பயிற்சிகளை வழங்கி அதிபர்களுக்கு கேர்ணல் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அப்போது எதிர்க்கட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தது.
ஆனால் தற்போது எதிர்வரும் 22ஆம் திகதி தென்மாகாண அதிபர்களுக்கு இராணுவ பயிற்சியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது. -(3)




