செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கு மூலிகை கஞ்சி!
பாடசாலை மாணவர்களுக்காக மூலிகைக் கஞ்சி வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுவதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்தத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமென அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக 1000 பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-(3)




