செய்திகள்
பாணின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்
நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு பாணின் விலையை 4 ரூபாவால் குறைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் வாரம் மார்ச் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை அமைந்துள்ளது.
இந்த வாரத்திற்குள் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 54 ரூபாவாக காணப்படும் ஒரு இறாத்தல் பாணின் விலையை, 50 ரூபாவாக குறைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
n10




