செய்திகள்
பாண் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!
பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மா விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் மற்றும் ஏனைய மற்றைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




