பாண் விலை மேலும் அதிகரிக்கலாம்!
பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறித்தியுள்ளது.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மேலும் கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளதுடன் பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் பேக்கரி தொழிலை பாதிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பேக்கரி பொருட்களின் விலைகள் உயர்வதோடு அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-(3)




