பாதயாத்திரையில் கம்யூனிஸ்ட் கட்சி பங்குகொள்ளுமா? சர்ச்சையை ஏற்படுத்திய சுலோகங்கள்!
கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாத யாத்திரையில் பங்குகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா, இது தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்த பாத யாத்திரையில் முன்வைக்கப்படும் சில கோஷங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது.
குறிப்பாக, “புதிய அரசியலமைப்பு மரணப் பொறி” போன்ற கோஷங்களைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும், அதனால் இந்தப் பாத யாத்திரையில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை எனவும் டியூ குணசேகரா தெரிவித்திருக்கின்றார்.
இருந்தபோதிலும், கட்சியின் மற்றொரு முக்கிய பிரமுகராக ராஜா கொலுரே, இந்தக் கருத்துக்களுடன் முரண்பட்டுள்ளார். பாத யாத்திரையில் முன்வைக்கப்படும் கோஷங்களில் சில தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும் கூட, அதில் கலந்துகொள்வதில்லை என்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் உருவாகியிருக்கும் இந்தக் கருத்து முரண்பாடுகளையடுத்து நாளை கண்டியிருந்து ஆரம்பமாகும் பாத யாத்திரையில் அக்கட்சி பங்குகொள்ளுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது.
R-06




